Annamalai BJP | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை `என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், திருப்போரூரில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை முழுவதுமாக மாற்றக்கூடிய யாத்திரையாக ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை உள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், திருச்செந்தூரில் கடலிலும், திருப்போரூரில் ஆகாயத்திலும் என்று 3 இடங்களில் முருகப் பெருமான் அசுரர்களை அழித்தார். அதேபோல அசுரர்களை நாம் களைய வேண்டும்.
திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் நடைபெறவில்லை. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20% கூட நிறைவேற்றவில்லை. ஆனால், கனவு உலகில் வாழும் முதல்வர் 99% நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார். பாஜகவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இருந்து நம்முடைய பங்காக 39 எம்.பி-க்களை மக்களவைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.
Read More : Food Price | மக்களே..!! இனி ஓட்டல்களில் உணவுகளின் விலை அதிரடியாக உயருகிறது..!! காரணம் இதுதான்..!!