fbpx

Annamalai | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை..!! அதிமுக பரபரப்பு புகார்..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய India Court Fee முத்திரைத் தாளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர உள்ளது.

Read More : டான் செட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..?

Chella

Next Post

பெண்ணின் ஆடைகளை கழற்றி நிர்வாண ஊர்வலம்... ஹோலி கொண்டாட்டத்தில் அரங்கேறிய கொடூரம்...

Thu Mar 28 , 2024
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால் அடித்து உதைக்கப்பட்டார். மேலும், பெண்ணின் ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இன்று சச்சோடா கிராமத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் மேத்தா சென்றார். ஆனால், […]

You May Like