டான் செட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..?

எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்ஜி, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான டான் செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் டான் செட் எனும் நுழைவுத் தேர்வை, ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதினர்.

இந்நிலையில், டான்செட் நுழைவுத் தேர்வு முடிவினை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Brain | மனித மூளையின் அளவு பெரிதாகிறது..!! விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!! ஆபத்தா..?

Chella

Next Post

Annamalai | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை..!! அதிமுக பரபரப்பு புகார்..!!

Thu Mar 28 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் […]

You May Like