தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை திட்டத்திற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மார்ச் முதல் வாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அநியாயம் நடப்பதாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதம் எங்களுக்கும் கிடைத்துள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசும் போது, மத்திய – மாநில அரசுகளை குற்றம்சாட்டினார்.
உங்கள் குழந்தைக்கு 3 மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் 3 மொழி. ஆனால், தவெக தொண்டர்கள், குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா..? விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்றுவிட்டார். அதற்கான மரியாதை அப்போதே தெரிந்துவிட்டது.
எங்கேயும், யாரும் மொழியை திணிக்கவில்லை. நீங்களே ப்ரோ என்று சொல்லி பொய் சொல்லலாமா ப்ரோ? பிரசாந்த் கிஷோருக்கு நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தீர்கள்..? அதற்காக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும், எங்களுக்கும் என்ன பிரச்சனை..?என கேள்வி எழுப்பினார். மேலும், தவெக விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.