fbpx

கொரோனாவின் மற்றொரு வடிவமா..? H3N2 வைரஸ் எப்படி பரவுகிறது..? எப்படி தடுப்பது..?

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.. இந்த புதிய வைரஸ் மக்களில் சுவாசக் கோளாறுகளை தூண்டுகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது..

H3N2 எவ்வாறு பரவுகிறது.. ? H3N2 மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாகும். இந்த வைரஸ் காரணமாக டெல்லியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்களுக்கு 4-5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் நீடிக்கிறது.. மேலும் இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகுளும் ஏற்படுகிறது.. இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை ஆகிறது…

கொரோனாவில் இருந்து H3N2 எவ்வாறு வேறுபடுகிறது? கொரோனா வைரஸை போன்றே, H3N2 வைரஸ் பாதிப்பிலும் தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.. மேலும் கொரோனா, H3N2 வைரஸ் இரண்டும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.. இரண்டுமே நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே கைகளை கழுவுவது நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.. ஆனால் தற்போதுள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இதுவரை H3N2 வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

H3N2 அறிகுறிகள்

  • சளி
  • இருமல்
  • காய்ச்சல்
  • குமட்டல்
  • வாந்தி
  • தொண்டை வலி
  • உடல் ஒரு வலி
  • வயிற்றுப்போக்கு
  • தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்

எப்படி தடுப்பது?

இங்கு திருவிழாக் காலம் இருப்பதால், தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. H3N2 இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க, ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடுவது அவசியம்.. மேலும், அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ வேண்டும். நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடு வேண்டும்.. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பள்ளி அல்லது அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.. மருத்துவர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Maha

Next Post

இப்படியும் ஹோலி பண்டிகை கொண்டாடுவார்களா..? கற்களை தூக்கி அடித்து கோலாகல கொண்டாட்டம்..!!

Wed Mar 8 , 2023
ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை என்றாலே வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி வாழ்த்துகளை தெரிவித்து கொள்வர். ஆனால், சில இடங்களில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் விநோத நிகழ்வும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் அருகே பிலுடா கிராமத்தில் தான் அந்த வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஊரின் […]
இப்படியும் ஹோலி பண்டிகை கொண்டாடுவார்களா..? கற்களை தூக்கி அடித்து கோலாகல கொண்டாட்டம்..!!

You May Like