கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலந் நாட்டு இளைஞர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் போலந்தில் சடலமாக மீட்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, போலந்தில் பணிபுரிந்து வந்த தென் மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளன.
கேரளா மாநிலம் ஒல்லூரில் வசிக்கும் சூரஜ் என்ற 23 வயது இளைஞரை ஜார்ஜியக் குழுவினரால் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இவர் கடந்த ஐந்து மாதங்களாக போலந்தில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது சூரஜ் உடன் இருந்த கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களும் காயமடைந்தனர்.