fbpx

தைவானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு!

தைவான் நாட்டின் கிழக்கு ஹுவாலியன் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 என்ற பலத்த நிலநடுக்கம் இன்று மாலை 5:08 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டு மத்திய வானிலை ஆய்வு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைவானில் ஏப்ரல் 3 ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் மலைப்பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஹுவாலியன் நகரின் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கடைசியாக ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு கல் குவாரியில் மீட்புப் பணியின்போது மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 5:08 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகரான தாய்பே-யிலும் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) இதன் அளவை 5.5 ரிக்டர் என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழத்தை 8.9 கிலோமீட்டர் என்றும் கணக்கிட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது.

ஏப்ரல் 3 ஆம் தேதி நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மாலை பதிவான நிலநடுக்கம் பெரியது என்று AFP பத்திரிகையாளர் தெரிவித்தார். தைவான் இரண்டு பெரிய நிலத்தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

"போதை பொருள் விற்பனையை தடுக்க ஏன் நடவடிக்கை இல்லை" ; அண்ணாமலை ஆவேசம்!

Mon Apr 22 , 2024
கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துநரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையால் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஏன் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் நின்றிருந்த இளைஞர்கள் மீது லேசாக உரசி, பேருந்து நிற்காமல் சென்றதால், அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை, இளைஞர்கள் […]

You May Like