fbpx

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்! இன்று மேலும் ஒரு மாணவர் மரணம்!

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை ஐஐடி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி ஐஐடியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இங்கு கல்வியின் தரம் நன்றாக இருப்பதோடு ஐஐடியில் படித்தால் எளிதாக வேலை கிடைத்து விடும் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில்கின்றனர். மேலும் இங்கு இருக்கும் பாடத்திட்டங்கள் மற்ற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை விட சற்று கடினமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதம் சென்னை ஐஐடியில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஐஐடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் பி டெக் மூன்றாம் ஆண்டு படித்து படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் நேரம் என்பதால் இரவு வெகு நேரம் கண்விழித்து படித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நேரமாகியும் இன்று அவரது அறை திறக்கப்படாததால் சகமாணவர்கள் கதவை தட்டி இருக்கின்றனர். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதிக்காப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் விடுதிக் காப்பாளர் மற்றும் மாணவர்கள் அவரது அறையை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது மாணவர் புஷ்பக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Rupa

Next Post

"எப்போ பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருக்கா சார்"! என்று போலீஸிடம் மனைவியை பற்றி புகார் கொடுத்த கணவர்! குழம்பிய போலீஸ்!

Tue Mar 14 , 2023
பெங்களூருவைச் சார்ந்த நபர் ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் காவல்துறையைச் சார்ந்தவர்களை அதிர்ச்சியளிக்க செய்திருக்கிறது. தனது மனைவி எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதாக பெங்களூரைச் சார்ந்த கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் நகரின் பசலகுடி என்ற பகுதியில் வசிக்கும் இம்ரான் கான் என்பவர் தான் இந்த விசித்திரமான புகாரை காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி ஆயிஷா […]

You May Like