fbpx

ரெடி..! 14-ம் தேதி முதல் விடைத்தாள்…! 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்த கல்வியாண்டு நடைபெற்ற 11-ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் 14-ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்கள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறு கூட்டலுக்கு விண்ணபிக்க விரும்பினால், இதே இணையதளத்திலிருந்து அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் மற்றும் ஜூலை 2023, மேல்நிலைத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் காலை 11 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

76 வது சுதந்திர தின விழா…..! 40,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்….!

Sun Aug 13 , 2023
நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சுதந்திர தின விழா அன்று நடைபெறவுள்ள காவல் […]

You May Like