இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள்/பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் / அட்டைகள் அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விளம்பர பலகைகள்/பதாகைகள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பதாகைகள் நிறுவ தமிழ்நாடு ஊராட்சிகள், விளம்பர பதாகைகள் நிறுவ உரிமம் வழங்குதல் மற்றும் அது தொடர்பான விளம்பர வரி விதித்தல்) விதி, 2009 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மேற்படி விதிகளை பின்பற்றி கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள், பதாகைகள், தட்டிகள் நிறுவ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு முறையாகவிண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதி பெறாமல் நிறுவும் பட்சத்தில் அவை சட்டத்திற்கு, புறம்பாக நிறுவியதாக கருதப்பட்டு மேற்படி விதி 9-ன் கீழ் சம்பந்தப்பட்ட ஊராட்சியால் உடனடியாக அகற்றப்படும்.
விதிகளுக்கு புறம்பாக அணுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் /பதாகைகள் /தட்டிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண்.33819/2018, 30233/2011 மற்றும் 7304/2006 ஆகிய ரிட் மனுக்களில் வழங்கிய தீர்ப்பாணைகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.