fbpx

வாவ்…! ரூ.1,000 முதல் 25,000 வரை கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது…?

கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025-ம் நிதி ஆண்டில், ரூபாய் 1000 முதல் ரூபாய் 25000 வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

https://scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்பு கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

English Summary

Applications are invited electronically for educational assistance.

Vignesh

Next Post

கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி!. வைரலாகும் வீடியோ!

Wed Jul 3 , 2024
Prime Minister Modi gave water to the opposition MP who raised slogans! Viral video!

You May Like