fbpx

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு…! என்னென்ன தகுதிகள்….? முழு விவரம்…

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள, கீழ்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித்தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் 26.07.2022 அன்று அல்லது அதற்கு முன் doplichennai[at]gmail[dot]com மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிக்கான நிபந்தனைகள்; கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, வயது 18 முதல் 50 வரை இருக்க வேண்டும். படித்து வேலைவாய்ப்பு இல்லாத அல்லது சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள். காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய முழு விவரம் ஆகியோருக்கு முன்னுரிமை. மேலும் மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர் நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்.

நேரடி முகவர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வு 28.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, வடபழனி அஞ்சலகத்தில் நடைபெறும். இதன் பின் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேசிய சேமிப்பு பத்திரம்/கிசான் விகாஸ் பத்திர வடிவில் ரூ.5,000-க்கான பாதுகாப்பு வைப்புத் தொகை வழங்க வேண்டும் என சென்னை நகர தெற்கு கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

Fri Jul 22 , 2022
திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 25 வயது பெண் ஒரு தனது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.. அதாவது, “இது […]

You May Like