fbpx

Jobs: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்…!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), 2 மணி நேரம் கணினி வழியில் மருந்தியல் தேர்வும் நடைபெறும்.

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்சி-ஏ, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Applications can be made for 425 vacant pharmacist positions in government hospitals.

Vignesh

Next Post

சிப்ஸ் பிரியர்களே உஷார்!. உடல் பருமன் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும்!. ஆய்வில் அதிர்ச்சி!

Thu Feb 27 , 2025
Chip lovers beware! Obesity will have an impact on the country's economy! Shocking study!

You May Like