fbpx

அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், டேட்டா புளோ மற்றும் எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியாளர்களுக்கு உணவுப் படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலை தளமான www.omcmanpower.com-60-ல் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு இடைத்தரகரோ அல்லது ஏஜென்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடம் இருந்து ரூ.35,400 மட்டும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

’நான் ஒன்றும் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை’..!! நெட்டிசனின் கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த பிரியா..!!

Mon Jul 10 , 2023
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இவர், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள நிலையில், ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பிரியா பவானி சங்கருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. நடிகை பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு பிசியான […]

You May Like