fbpx

பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு…! 2023 மே 1-ம் தேதி வரை கால அவகாசம்…! உடனே விண்ணப்பிக்கவும்….!

தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌, இளைஞர்‌ நலன்‌மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டப்‌ பேரவையில்‌ மஞ்சப்பை விருதுகள்‌ அறிவிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால்‌ ஆன கவர்கள்‌ ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின்‌ பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள்‌ வளாகத்தை பிளாஸ்டிக்‌ இல்லாததாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களை தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்‌.

மாநில அளவில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ 3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்‌. மேலும்‌ முதல்‌ பரிசாக ரூ. 10.00 லட்சம்‌, இரண்டாவது பரிசாக ரூ.5.00 லட்சம்‌ மற்றும்‌ மூன்றாவது பரிசாக ரூ.3.00 லட்சம்‌ வழங்கப்படும்‌.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு மஞ்சப்பை விருதினை வழங்க உள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே உஷார்!!! சி.பி.எஸ்.இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ஹால் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..!

Sun Dec 18 , 2022
சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ‘சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல, போலி இணையதளம் ஒன்றை “cbsegovt.com” என்ற பெயரில் சில சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் […]

You May Like