fbpx

புதிய ரேஷன் கார்டு வேண்டுமா…? இன்று காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்…!

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ பொது விநியோகத்திட்டம்‌ தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல்‌ அலுவலரிடம்‌ நேரில்‌ தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்‌.

இக்குறைதீர்‌ முகாமில்‌, குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌, முகவரிமாற்றம்‌ மற்றும்‌ புதிய குடும்ப அட்டை / நகல்‌ அட்டை கோரும்‌ மனுக்கள்‌ பெற்று உடனடிநடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, கைபேசி எண்‌ பதிவு மற்றும்‌ கைப்பேசி எண்‌ மாற்றம்‌ செய்தலுக்கான மனு பெற்று உடன்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. பொது விநியோக கடைகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்த புகார்கள்‌ இருப்பின்‌ அதன்பேரில்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

Vignesh

Next Post

மூளையில் இரத்தக்கசிவு!... தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் கோல்கீப்பர் எட்வின் வான் டெர் சார்!

Sat Jul 8 , 2023
அஜாக்ஸ் தலைமை நிர்வாகியாக இருந்து விலகியவரும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கோல்கீப்பர் எட்வின் வான் டெர் சார், மூளையைச் சுற்றி ரத்தக்கசிவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்வின் வான் டெர் சார் ஒரு டச்சு கால்பந்து நிர்வாகி மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர் ஆவார் , அவர் சமீபத்தில் AFC அஜாக்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்தார். கடந்த மே மாதம், வான் டெர் சார், […]

You May Like