அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை சார்ந்த கல்லூரிகளில் 21.8.2023 முதல் நடத்தப்பட்டது. சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன.
எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- பற்றி பார்க்கலாம்.
மேலும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.