fbpx

சூப்பர் வாய்ப்பு..! LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள்… இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்…!

பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இன் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கரியால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டமாகும். மேற்படி பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப, புதிய முன்னெடுப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்குள் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (அறை எண்.110) நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

English Summary

Apply to get LPG powered scrubber boxes… free of cost

Vignesh

Next Post

டிகிரி போதும்.. தமிழக அரசில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Sun Sep 8 , 2024
Tamil Nadu State Rural Livelihoods Movement has released a job notification.

You May Like