fbpx

நெருங்கும் கிறிஸ்துமஸ்!… சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!… போக்குவரத்து துறை அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் டிச.22-ல் கூடுதலாக 350 பேருந்துகள், டிச.23-ல் 290 பேருந்துகள் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

Kokila

Next Post

ஏடிஎம்மில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்யவேண்டும்?… நிமிடங்களில் மாற்றலாம்!… எப்படி தெரியுமா?

Thu Dec 21 , 2023
ஏடிஎம் மெஷினில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது உங்களுக்கு எப்போதாவது நடந்தால், பீதி அடைய வேண்டாம். சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றலாம். நோட்டுகளை மாற்ற வங்கியில் நீண்ட செயல்முறை இல்லை. நிமிடங்களில் மாற்றலாம். ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட கிழிந்த நோட்டை ஏடிஎம் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கு எடுத்துச் செல்லவும். நீங்கள் அங்கு சென்று ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். இதில் […]

You May Like