செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்..! வரும் 28ஆம் தேதி சென்னை வருகை..!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை உக்ரைன் மீதான போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறவுள்ளது.

PM Modi to chair UNSC debate on maritime security today: 10 points | Latest  News India - Hindustan Times

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Chella

Next Post

15 லட்சத்தை அசால்டாக அடித்துச் சென்ற இளம் பெண்; அழகாக இருந்ததை நம்பி மோசம் போன மாப்பிள்ளை...!

Wed Jul 13 , 2022
தென்காசி மாவட்டத்தில் கல்யாணமான மறு நாளே 15 லட்சத்துடன் மணப்பெண் கானாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு நாட்கள் நெருங்க ஆரம்பிக்கவும் பவித்ராவின் குடும்பத்தினர் முத்துகுமார் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். திருமண செலவுக்கு பணம் இல்லாததால் திருமணம் செய்ய வேண்டுமானால் […]

You May Like