fbpx

பள்ளிக் கல்வித்துறையில் 10,000 போலி ஆசிரியர்களா..? உண்மை என்ன…? தமிழக அரசு விளக்கம்

10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல், வெளிநபரை கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்வது குறித்து புகார்கள் வந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியின் விசாரணையில், அது உண்மை என கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலி பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்ட 6,053 தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு யாரேனும் பணிபுரிகின்றனரா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது. அந்த வகையில், மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டார கல்வி அலுவலர்களிடம் இருந்து இதுபோல வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை ஏதும் பெறப்படவில்லை. சமூக ஊடகங்களில் வெளியாவதுபோல, 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Are there 10,000 fake teachers in the school education sector?

Vignesh

Next Post

மாணவர்களே கவனம்...! நீட் போன்ற பயிற்சி குறித்து தவறான விளம்பரம்...! மத்திய அரசு வழிகாட்டு வெளியீடு...!

Thu Nov 14 , 2024
Has issued detailed guidelines to address the issue of false advertising in the training sector

You May Like