பொதுவாகவே உலகில் பல மர்மங்கள் அறியப்படாத நிலையில் நிறைய இடங்கள் இருக்கின்றது. அதில் சில புகழ் பெற்ற பல இடங்கள் நம்மை ஆச்சர்யமூட்டும் வகையிலும் சுற்றுலா செல்லும் இடங்களும் பல இருக்கிறது. ஆனால் சில இடங்கள் இன்னும் தீர்க்கமுடியாத மர்மங்களை பூசிக் கொண்டு இன்னும் இருக்கிறது. அந்தவகையில் ஆச்சர்யமூட்டும் ஒன்றுதான் இந்த ஈஸ்டர் தீவு.
பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது. 10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இவர்களின் கலாச்சாரமும் ஒரு புதிராகவே உள்ளது.
தீவுகளில் சிற்பங்களை பார்த்திருப்போம், இங்கோ ஒரு தீவே சிற்பங்களால் நிறைந்துள்ளது. 4 அடி அகலமும் 5 அடி உயரமும் 4 டன் எடையும் கொண்ட மனிதனின் தலை போன்ற உருவமுடைய அந்த சிற்பங்கள், Isla De Pascua என்று அழைக்கப்படும் அந்த தீவுக்கு அதை முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் EASTER ISLAND என்ற பெயரிட்டனர்.

சில நூறு ஆண்டுகளாக இந்த தீவை ஆய்வு செய்து வந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் பல வியப்பூட்டும் ஆச்சர்யங்கள் கிடைத்துள்ளன. இந்த பெரிய சிலைகள் பெரும்பாலானவை எரிமலை சாம்பலால் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 தலைகளை மட்டும் கொண்ட இடமாக கருதியவர்களுக்கு அங்கு ஏற்பட்ட ஒரு சிறு நிலச்சரிவு ஒரு சுவாரசியத்தை வெளிக்கொணர்ந்தது. உண்மையில் அவை வெறும் தலைகள் அல்ல, ஆம் மாறாக அவை அனைத்தும் முழுமை பெற்ற ஒரு மனிதனின் உடல். கிட்டத்தட்ட 13 அடி உயரமும் 14 டன் எடையும் கொண்ட ஒரு ஒற்றை கல் பிரம்மாண்டம்.
இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரியுமாக இருக்கின்றன. இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்தச் சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்தபோது அது அந்தத் தீவிலிருக்கும் பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. குறிப்பாக 834 சிலைகள் “டஃப்” (Tuff) என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.
80 டன்னுக்கு மேல் எடையிருக்கும் இவற்றை மரக்கட்டைகளில் வைத்து உருட்டியிடுக்கலாம் என சிலர் கூறுகின்றனர். நடப்பதற்கு ஏற்ற வகையில் இந்த சிலைகளின் அடி பாகம் செதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த சிலைகளுக்கு ‘நடக்கும் சிலைகள்’ என்றும் பெயர்! ஆனால் பலரும் இதனை நம்புவதில்லை. தனித்து இருக்கும் இந்த தீவு மக்கள் இதனைச் செய்திருக்க முடியாது,
இந்த மோவாய் சிலைகளில் ஒன்றான Hoa Hakananai’a என்ற சிலையை 1868ம் ஆண்டு ரிச்சர்ட் போவெல் என்ற ஆங்கிலேயே கப்பல் கேப்டன் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளித்தார். அது லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டது. மோவாய் சிலைக்கு சொந்தக்காரர்களான தீவின் பூர்வீக மக்கள் அதனை திருப்பித் தரவேண்டும் என சிலி அரசின் வாயிலாக இங்கிலாந்திடம் கேட்டு வருகின்றனர்.