fbpx

மத்திய அரசு ஊழியரா நீங்கள்!… அறிவிப்பு வந்தாச்சு!… என்னென்ன தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3-6 சதவீதம் வரைக்கும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டு இருந்த டிஏ நிலுவைத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாக EPFO அறிவித்துள்ளது. இப்போது வரைக்கும் கடந்த 60 மாதங்களின் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு வந்தது. எனினும் தற்போது கடந்த 60 மாதங்கள் மட்டும் கணக்கிடப்படாமல் மொத்தமாக ஓய்வூதியதாரர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புது பென்ஷன் முறையை நடைமுறைபடுத்துவதற்கான ஆலோசனை நடந்து வருவதாகவும் EPFO அறிவித்திருக்கிறது.

Kokila

Next Post

ரயில், பேருந்து பயணத்தின்போது காப்பீடு செய்துகொள்ளுங்கள்!... ஐஆர்சிடிசி முக்கிய தகவல் இதோ!

Sat Jun 17 , 2023
ஒடிசா ரயில் விபத்தையடுத்து, டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

You May Like