ஓய்வு பெற்ற எந்த ஒரு ஊழியருக்கும் ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவசர காலங்களில் உதவுகிறது.
மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சான்றிதழ் மிக முக்கியமான ஆவணம். ஏனெனில் இது ஓய்வூதியம் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் ஜீவன் பிரமான் பத்திரம் அல்லது டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். எனவே ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திற்கு ஓய்வூதியத்திற்கான ஆயுள் சான்றிதழ் தேவைப்படுவதால், வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு எளிதாக உருவாக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில எளிய முறைகளை பரிந்துரைத்துள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
ஃபேஸ் ஆதென்டிகேஷன் மூலம் லைப் சர்டிபிகேட் உருவாக்கும் செயல்முறை :
☞ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் 5 மெகாபிக்சல் கேமராவை இணையத்துடன் பயன்படுத்தவும்.
☞ ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
☞ AadharFaceRd பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
☞ https://jeevanpramaan.gov.in/package/download இலிருந்து ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆதென்டிகேஷனை பதிவிறக்கவும்
☞ அதன் பிறகு ஆபரேட்டர் அங்கீகாரம் மற்றும் ஆபரேட்டரின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்
☞ ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும்
☞ ஃப்ரண்ட் கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க வேண்டும்
டோர்ஸ்டெப் பேங்கிங் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் ஓய்வூதியம் பெறுபவர் தனது DSLஐ டெபாசிட் செய்யலாம். இந்த சேவையை முன்பதிவு செய்ய கட்டணமில்லா எண்களில் அழைக்கலாம்- 18001213721, 18001037188