fbpx

”நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணிப்பவர்களா”..? வந்தாச்சு Paytm-இன் புதிய வசதி..!!

நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணம் செய்தால், இனி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதில்லை. இனி டிக்கெட்டுக்கு பணம் செலுத்த Paytm-ஐ பயன்படுத்தலாம். இந்தியாவின் முன்னணி பேமெண்ட் தளமான Paytm பிராண்டும், மேற்கு வங்க போக்குவரத்துக் கழகமும் (WBTCL) கைகோர்த்துள்ளன. ஏசி மற்றும் ஏசி அல்லாத WBTCL பேருந்துகளில் Paytm மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம், கொல்கத்தா, திகா, பராசத், ஹல்டியா, புருலியா, துர்காபூர், ஹப்ரா, அசன்சோல், போல்பூர், மாயாபூர் மற்றும் மால்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான WBTCL பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி கொல்கத்தா, திகா, பராசத் மற்றும் பல நகரங்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளுக்கான முன்பதிவுகளை பயனர்கள் பேடிஎம் மூலமாகவே செய்துகொள்ள முடியும். மேலும், WBTCL உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான 11 போக்குவரத்து நிறுவனங்களுடன் Paytm கைகோர்த்துள்ளது. கொல்கத்தாவைத் தவிர, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களில் இந்தச் சேவை கிடைப்பதாக தெரிகிறது. உங்கள் பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்ய Paytmஐப் பயன்படுத்தினால், மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கும் என்பது உறுதி. Paytm UPI, Paytm Wallet, நெட்பேங்கிங், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தலாம். “BESTPRICE” என்ற ப்ரோமோ கோடைப் பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ரூ.100 வரை பிளாட் 20 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம். விரைவில் தமிழகத்திலும் இந்த அம்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Thu Mar 2 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 191-வது பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளினை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 8ஆம் […]

You May Like