fbpx

ட்விட்டர் ப்ளு டிக் பயனரா நீங்கள்!… இனி 2 மணிநேரம்!… எலான் மஸ்க் கொடுத்த புதிய ஆஃபர்!

ட்விட்டர் ப்ளூ டிக் கணக்காளர்கள் 2 மணிநேரம் வரையில் ஓட கூடிய வீடியோ பதிவை, 8ஜிபி அளவு வரை அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றி கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க், நிர்வாகம் மற்றும் ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது. வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என டிவிட்டர் தளத்தின் மாதாந்திர சந்தா உள்ளது.

அதன் பிறகு ஆடியோ கால், வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்த எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . அதாவது அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்கும் ப்ளூ டிக் கணக்காளர்கள் 2 மணிநேரம் வரையில் ஓட கூடிய வீடியோ பதிவை , 8ஜிபி வரை அளவு வரையில் அனைவரும் பார்க்கு வகையில் பதிவேற்றி கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கான அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது. இதனை பார்த்த டிவிட்டர்வாசிகள், இனிமேல் முழு நீள படத்தை இதில் பதிவேற்றலாம். அதே போல திரைப்படத்தை இதில் பார்த்துக்கொள்ளவும் செய்யலாம் என கூறி வருகின்றனர்.

Kokila

Next Post

இனி யூடியூப்பில் விளம்பரத்தை முழுசா பார்த்தேதான் ஆகனும்!... ஸ்கிப் செய்ய முடியாது!... அதிர்ச்சி அளித்த கூகுள்!

Sat May 20 , 2023
டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து யூடியூப் நிறுவனம் தொலைக்காட்சி யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது. செல்போன்களில் யூடியூப் செயலியை பார்க்கும் பொழுது […]

You May Like