fbpx

ஆன்லைன் செயலியில் கடன் வாங்குபவரா நீங்கள்..? இது உங்களுக்கான எச்சரிக்கை தான்..!!

ஆன்லைனில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்த நபரை நூதன முறையில் போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை மாங்காடு முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் கபீர் முகம்மது. இவர் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கியதால் ஆன்லைன் செயலி மூலமாக ரூ.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி கபீர் முகம்மதுவை சிக்க வைக்க லோன் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, ஜப்பானில் இருந்து நாங்கள் பேசுகிறோம்…. மாங்காடு அடுத்த முத்தமிழ் நகரில் கபீர் அகமது என்பவர் வெடிகுண்டு தயாரிப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்படவே குறிப்பிட்ட இடத்திற்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக்கொண்டு போலீசார் புறப்பட்டனர். அதன்பிறகே இந்த தகவலில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.

ஆன்லைன் செயலியில் கடன் வாங்குபவரா நீங்கள்..? இது உங்களுக்கான எச்சரிக்கை தான்..!!

விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதும் கடனை சரிவர கட்டாததால் கபீரை சிக்க வைக்க ஆன்லைன் நிறுவனம் முயன்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கி அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று போலீசாரும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் சிலர் இதுபோன்ற செயலிகளில் கடன் வாங்கும் போக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடனை செலுத்திவிட்டாலும் கூட கூடுதல் தொகை கேட்பதாகவும் கொடுக்காத பட்சத்தில் மன ரீதியாக துன்புறுத்தி அவர்களை மோசமான முடிவுகளை நோக்கி தள்ளும் வகையில் மிரட்டும் போக்கிலும் இதுபோன்ற நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. எனவே, இதுபோன்ற செயலிகள் மூலமாக கடன் வாங்கி அவஸ்தை பட வேண்டாம் என காவல்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

அகவிலைப்படி உயர்வு..!! வரி கட்டாயம்..!! மத்திய அரசு ஊழியர்களே கவனம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Thu Dec 22 , 2022
அகவிலைப்படியின் பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்தாண்டு அகவிலைப்படி அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்த வேண்டும். தொழிலாளர் மற்றும் […]

You May Like