fbpx

தீவிரமடைந்த போராட்டம்… குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு தப்பியோடிவிட்டார்..

இந்நிலையில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.. தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப் போவதில்லை என்று கோட்டபய ராஜபக்ச கூறியிருந்த நிலையில் தற்போது விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. நேற்றிரவு இரவு இராணுவ ஜெட் விமானத்தை எடுத்துக்கொண்டு மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்தில் கோட்டப்ய ராஜபக்ச தரையிறங்கினார். தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது..

அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவும், திங்கட்கிழமை நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

இதனிடையே இன்று தனது இராஜினாமாவை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு கோட்டபய அறிவுறுத்தி இருந்தார்.. இலங்கை நெறிமுறையின்படி, அவர் ராஜினாமாவை இலங்கையின் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் அதன் நகலை பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். ஜூலை 20ஆம் தேதி அவருக்குப் பதிலாக நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும்.

அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய தேர்தல் ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பம் 22 மில்லியன் மக்கள் வாழும் இலங்கை நாட்டின் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மேலும் பெரும்பாலான இலங்கையர்கள் தங்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு அவர்களையே குற்றம் சாட்டுகின்றனர்.

Maha

Next Post

தொடரும் கனமழை.. இந்த மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..

Wed Jul 13 , 2022
கனமழை தொடர்வதால் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. இந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் […]

You May Like