fbpx

கோபமா இருக்கீங்களா?… அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க!… கோபமான மனநிலையை சமாளிக்க டிப்ஸ்!

ஒருவரின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று கூற முடியாது. நாம் அனைவருமே தினமும் பல்வேறு மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகிறோம். அந்த மாற்றங்களுக்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களாக கூட இருக்கலாம். ஹார்மோன்கள் மனநிலை மாற்றங்களையும் குழப்பமான உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். அவற்றில் சில மன அழுத்தமாக இருக்கலாம். அதிக அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் மிகவும் எளிதாக கோபப்படுவார்கள். இப்படி குழப்பமான மனநிலையாலும், கோபத்தை அடக்கமுடியாமல் இருக்கும் பொழுதும் எப்படி அதை சமாளித்து செல்ல வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

ஒருபோதும் கோபமாக படுக்கைக்குச் செல்ல கூடாது. தூங்கச் செல்வது எதிர்மறை உணர்ச்சிகளை வலுப்படுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம். நாம் விழித்திருக்கும்போது நாம் பெறும் தகவல்களைச் செயலாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தூக்கம் உதவுகிறது என்று நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஒரு வாதத்திற்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் முன் உங்கள் மனநிலையை தெளிவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் கோபப்படும்போது வாகனத்தை இயக்குவது ஆபத்தானது. மோசமான மனநிலையில் இருக்கும்போது, நீங்கள் அதைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறீர்கள், இதனால் அது விபத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.

கோபமாக இருக்கும் போது அதிகம் சாப்பிட கூடாது. சாப்பிடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது மற்றும் உங்களின் எடை அதிகரிக்கிறது. உங்களின் மோசமான மனநிலைக்கு காரணம் வாக்குவாதம் என்றால் மேற்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இது எந்த நல்ல முடிவுகளையும் ஏற்படுத்தாது மாறாக உங்கள் இதயத்தை உடைக்கவே செய்யும். எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மோசமான மனநிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுவிடுங்கள்.

ஒரு கோபமான சந்திப்புக்குப் பிறகு உங்களை அமைதிப்படுத்த மதுவை தேடுவது பெரும்பாலும் தவறானது. “ஆல்கஹால் உங்கள் கோபத்தை அதிக அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை உண்டாக்குகிறது. ஏனெனில் அது நம்முடைய கட்டுப்பாட்டை இழக்க வைக்கிறது. இதனால் அது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் . தற்காலிக கோப உணர்ச்சியிலிருந்து விடுபட நீங்கள் செய்யும் இந்த காரியம் மேலும் உங்களுடைய நிரந்தர அழிவுக்கு வழிவகுக்கும்.

உங்கள் மனநிலை உங்கள் பேச்சையும் பாதிக்கிறது. எனவே மோசமான மனநிலையில் இருக்கும்போது உங்களின் உயரதிகாரிகள், பெற்றோர்கள், உங்களுக்கு பிடித்தவர்கள் போன்றவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். அவ்வாறு பேசும்போது கோபத்தில் நீங்கள் பேசும் சில தேவையற்ற வார்த்தைகள் உங்கள் உறவை சிதைக்கக்கூடும்.

கோபமான மனநிலையில் வெளி இடங்களுக்கு செல்லும்போது உங்களுக்கு தேவையில்லாத பல பொருட்களை வாங்க நேரிடும். கோபமான மனநிலையில் இருக்கும்போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். கோபத்தில் எடுக்கும் முடிவு ஒருபோதும் நல்ல பலனை தராது. சிறிது நேரத்திற்கு பிறகு தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அதனை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லாமல் போகலாம்.

Kokila

Next Post

சிக்கன் பிரியர்களே எச்சரிக்கை!! நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளுக்கு, சாயம் பூசி விற்பனை..

Mon Oct 2 , 2023
அண்மையில், நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பல்வேறு உணவு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், திருப்பூர் – பெருமாநல்லூர் சாலை, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சாலையோரம் இறைச்சி மற்றும் மீன் விற்பனை […]

You May Like