Budget 2025: நடப்பாண்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மக்களவை மற்றும் மாநிலங்களைவில் உரையாற்றினார். அதில் அவர் இளைஞர்கள் வேலைவாப்பு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டிற்கு முன்னோட்டாமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் சமர்பித்தார்.
இந்தநிலையில், இன்று பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சராக இருப்பவர்கள் பட்ஜெட் நாளில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன் மூலம் தொடர்ந்து எட்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெறுவார். இருப்பினும், சில வருடங்களுக்கு முன் வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதி நாட்களில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U) போன்ற அரசாங்க முயற்சிகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு இருக்கும் என்று வீடு வாங்குபவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், முதல் முறையாக வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடனுடன் இணைக்கப்பட்ட மானியத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. தற்போது பல தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக வீடு வாங்குபவர்கள் கருதுவதால், எளிமையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
வீடு வாங்குபவர்களின் மற்ற முக்கிய கவலை என்னவென்றால், அதிக முத்திரைக் கட்டணம். சில மாநிலங்களில் வீடு வாங்குபவர்கள் 8-9 சதவீதம் வரை முத்திரை வரிகளை எதிர்கொள்கின்றனர். அதிக முத்திரை வரிகள் சொத்தின் விலையை கணிசமாக அதிகரிக்கின்றன. இதனால் சீரான மற்றும் குறைக்கப்பட்ட கட்டணங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், 80C மற்றும் 24(b) பிரிவின் கீழ் வரி விலக்கு வரம்புகளை அரசாங்கம் திருத்த வேண்டும். தற்போது, வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துவதற்கு ரூ. 1.5 லட்சம் பிடித்தம் செய்யலாம். சுயமாக ஆக்கிரமித்துள்ள சொத்துகளுக்கு வட்டி திருப்பிச் செலுத்தினால் விலக்கு அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வலுவான தேவையின் காரணமாக இந்திய ரியல் எஸ்டேட் சந்தை சிறப்பாக செயல்பட்டதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் சட்டம் RERA மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை ரியல் எஸ்டேட் துறைக்கு பல நன்மைகளை கொண்டு வந்துள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக 2025-26 பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS) மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்று வீட்டுக் கடன் வாங்குபவர்கள் எதிர்பார்க்கின்றனர். CLSS மீண்டும் வந்தால், தகுதியானவர்களுக்கு ₹2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும், இது நடுத்தர வருமானக் குழு, EWS மற்றும் LIG பிரிவினருக்கு உதவும்.