The new India assurance co.ltd என்ற நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற ஒரு பிரபல இந்திய பொதுத்துறை மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகும்.
மேலும் இந்த நிறுவனம் அரசு சார்ந்த நிறுவனம் என்று கூறப்படுகிறது. உள்ளடக்கிய ஒட்டுமொத்த பிரிமியம் வசூலின் அடிப்படையில், இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய மயமாக்கப்பட்ட பொது காப்பீட்டு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் கடந்த 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் 1973 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.தற்போது இந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதாவது Scale 1 கேட்டரில் 450 நிர்வாக அதிகாரிகளுக்கான காலில் இடங்கள் இருக்கிறது அதற்கான ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் பணி தொடங்கும் எனவும், இதற்கான விண்ணப்ப கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கூறுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கான இணையதளம் newindia.co.in என்று தெரிவிக்கப்பட்டுள்ளது