fbpx

அடுத்த போட்டித் தேர்வுக்கு தயாரா..? 2024-க்கான அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!!

டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.

ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டிஎன்பிஎஸ்சி அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் குரூப் 1 தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அமைச்சர் பதவிக்கு ஆப்பு..!! பொன்முடி வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு..!! எத்தனை ஆண்டுகள் சிறை..?

Thu Dec 21 , 2023
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த தண்டனையை நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிக்கிறார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் பொன்முடி நீடிப்பாரா என்பது தெரியவரும். 1996-2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு […]

You May Like