சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. எனவே வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒரு நல்ல மருந்தாகும். கீரையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இது வயிற்றுக்குக் குளிர்ச்சி அளித்து வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், இது மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. வயிற்றுப் புண்களை ஆற்றுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வைட்டமின் சி சத்துக்கள் போதிய அளவில் கிடைக்காமல் இருப்பதும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். எனவே குடை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப் புண் எளிதில் குணமடையும். வாழைப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண்களை எளிதில் ஆற்றலாம்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றுப் புண்களைப் போக்கும் தன்மை உடையது. எனவே, உணவில் தினமும் தயிர் சேர்த்து வருவதன் மூலம் வயிற்றுப் புண்கள் எளிதில் குணமாகும் மற்றும் தினமும் மோர் எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இது குளிர்ச்சி தன்மை உடையது. எனவே வயிற்றுப் புண்களை ஆற்ற நெல்லிக்காய் சாப்பிடலாம் அல்லது நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாம்.