இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஏனென்றால், பெரும்பாலானோர் படுத்துக்கொண்டு போனை பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இப்படி போனை பார்ப்பதால், தலையின் எடை முழுவதும் கழுத்தில் தான் விழும். இப்படி படுத்துக்கொண்டு போனை பார்ப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். படுத்துக்கொண்டு போனை பார்ப்பது மட்டுமல்ல, படுத்துக் கொண்டு டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூட செய்யக்கூடாது.
இப்படி படுத்து பார்த்தால் கழுத்தில் வலி வருவது மட்டுமின்றி, கழுத்துக்கு அருகில் உள்ள எலும்புகளும் தேய்ந்துவிடும், காதுகளும் பாதிக்கப்படும். எனவே, முடிந்தவரை படுத்துக் கொண்டே டிவி, போன் பார்க்காமல் இருப்பது நல்லது. அதுபோல, நீங்கள் ஒரு நாற்காலியில் அல்லது சோபாவில் அமர்ந்திருக்கும் போது கழுத்தை வளைத்து போன், டிவி பார்க்க கூடாது. முதுகை நேராக வைத்து உட்கார வேண்டும். மேலும், நீங்கள் படுத்திருந்து போன் பயன்படுத்தும் போது தலையணையால் முழங்கையை ஆதரிக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், பல வகையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.