விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இணைந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தளபதி 67 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் ஆரம்பமாகிவிட்டது. தற்சமயம் அடுத்த கட்ட நடவடிப்பிற்காக காஷ்மீருக்கு இந்த பட குழுவினர் சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் பூஜை வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பூஜை வீடியோவில் விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்டோரின் அருகில் ஒரு சின்ன பெண் குழந்தையும் நின்று இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. படத்தில் விஜய் மகளாக தான் அவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் அந்த பெண் குழந்தை யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் இயல் தான் அவர் என்று கூறப்படுகிறது. டிக்,டிக், டிக், காதலில் சுதப்புவது எப்படி? உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.