fbpx

“ இவர்களை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும்..” முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

போதைப் பொருள் விற்பனை செய்யும் அனைவரையும் காவல்துறை கைது செய்து, அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்பி.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, ஆலோசனை நடைபெற்றது.. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதைப் பொருள் தான் சாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிடுகிறது.. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிடுகிறது.. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது என்பது சமூக தீமை..

எனவே போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.. தமிழகத்தில் போதைப் பொருள் நுழைவதை தடுக்க முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.. போதை பொருள்கள், கல்லூரி, பள்ளிக்கு அருகில் விற்பனை ஆகாமல் கண்காணிக்க வேண்டும்.. போதைப் பொருள் விற்பனை செய்யும் அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும்.. அவர்களின் மொத்த சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும்..

போதையின் தீமை குறித்து மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.. மொத்த சமூகமும் இணைந்தால் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கலாம்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Wed Aug 10 , 2022
சென்னையில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

You May Like