fbpx

கைது செய்யப்பட்ட ஹமாஸ் வீரர்கள் உள்ளாடைகளுடன் ஊர்வலம்.! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி.!

இஸ்ரேலிய ராணுவம் கைது செய்யப்பட்ட ஹமாஸ் போராளிகளை அரை நிர்வாணப்படுத்தி அணிவகுக்கச் செய்த சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களையும் இஸ்ரேலில் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டு இருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன்டையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போர் சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் மீண்டும் ஆரம்பமானது. இந்த யுத்தத்தில் இதுவரை குழந்தைகள் உட்பட பல நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன.

கடந்த சில தினங்களாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தி வந்தது. அப்போது கமாஸ் படை பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்களை இஸ்ரேலிய ராணுவம் கைதிகளாக பிடித்து சென்றது. இந்தக் கைதிகள் அனைவரும் ஜலபியா நிவாரண முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை காசா சதுக்கம் பகுதிக்கு அழைத்து வந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் அரை நிர்வாணமாக்கி உள்ளாடையுடன் அந்தப் பகுதியில் அனைவரும் போர் நடத்த செய்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறது இஸ்ரேலிய ராணுவம்.

Next Post

எடப்பாடிக்கு சிக்கல்!… டெண்டர் முறைகேடு புகாரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்!… உச்சநீதிமன்றம் அதிரடி!

Sat Dec 9 , 2023
எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800கோடி டெண்டர் முறைகேட்டு ஊழல் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் […]

You May Like