fbpx

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறை..!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த செய்யும் வகையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பேச்சு, கவிதை, மணல் சிற்பம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போட்டிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு குறித்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன.

இதன் காரணமாக, பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய செப்டம்பர் 27ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த விவரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வெளிநாட்டுக்காரருடன் வாழ்க்கை நடத்திய ராதிகா..!! இப்போ மட்டும் கசக்குதா..? புட்டு வைத்த பயில்வான்..!!

English Summary

The deadline for conducting art festival competitions in Tamil Nadu government schools has been extended till September 27.

Chella

Next Post

ஐ லவ் யூ டீச்சர்.. என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? - ஆன்லைன் வகுப்பில் மாணவன் செய்த செயல்..!!

Wed Sep 18 , 2024
Student Asks Teacher, 'Will You Marry Me, Ma'am?' During Online Class, Leaves Internet Fuming

You May Like