fbpx

ராமர் கோவில்: “டெல்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை” அதிரடியாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தேசமே மும்முறமாக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் வருகின்ற 22 ஆம் தேதி நண்பகல் 12:20 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று நடத்த இருக்கும் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை விழாவில் அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 7000த்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். கூட்ட நெரிசல்கள் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வரவேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை கொண்டாடுவதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதேபோன்று டெல்லியில் இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது . இது தொடர்பான அறிவிப்புகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுநரான வி.கே சக்சேனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அரசு அலுவலகங்கள் குடிமை அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க டில்லியின் துணைநிலை ஆளுனரான வி.கே சக்சேனா உத்தரவிட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Post

இந்த அரிசியை யாரும் சாப்பிட வேண்டாம்..!! தமிழக ரேஷன் கடைகளில் வந்த புதிய மாற்றம்..!!

Sat Jan 20 , 2024
நாடு முழுவதும் மத்திய அரசு நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரிசியில் மாவு சத்தும், புரதச்சத்தும் உள்ளது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இவை அரிசியாக மாற்றப்பட்டு 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட […]

You May Like