ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவலையும் மே 7 வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது.
இந்த நிலையில் டெல்லி மதுக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் (ED) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது, அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளது.
ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் நேர்மையான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான காரணங்களுக்காக அல்ல என்றும் அமலாக்கத்துறை தனது பிரமாண பாத்திரத்தில் கூறியுள்ளது.