fbpx

தமிழக முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…..! காரணம் என்ன தெரியுமா….?

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்திற்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


அதாவது தலைநகர் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி இருக்கிறது.உச்சநீதிமன்ற உத்தரவை மேலும் விதமாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சென்னையில் சந்தித்து பேச உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Next Post

சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

Wed May 31 , 2023
கல்வித்தரத்தை உயர்த்த ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில் கல்வித்தரத்தில் 19-வது இடத்தில் பீகார் உள்ளது. இந்நிலையில், முதன்மை ஆசிரியர்கள் 79,943 பேரும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 32,916 பேரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 57,602 பேர் என மொத்தம் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like