ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தார். மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் அசோக் கெலாட்டின் அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் சமிப நாட்களாகவே மாநிலம் முழுவதும் பணவீக்கக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
மாதம் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கும். அவர்கள் எந்த கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை. மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், அதாவது எவ்வளவு பில் வந்தாலும் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை.