பழம்பெரும் அசாம் நடிகர் நிபோன் கோஸ்வாமி கவுகாத்தியில் உள்ள நெம்கேர் மருத்துவமனையில் காலமானார். பழம்பெரும் நடிகரான இவர் கடந்த சில நாட்களாக இதயம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, அக்டோபர் 24 அன்று அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோஸ்வாமி நெம்கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 80 வயதான இவர் அசாமின் தேஜ்பூரில் பிறந்தவர். புகழ்பெற்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் மற்றும் சுபாஷ் காய், நவின் நிஷோல் மற்றும் சத்ருகன் சின்ஹா போன்ற பிரபலங்களின் அறிமுகம் பெற்றவர். இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.