fbpx

பரபரப்பு… 2 திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு…! இன்று 10.30 காலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வாசிக்க உள்ளார்

English Summary

Asset hoarding case against 2 DMK ministers

Vignesh

Next Post

குட் நியூஸ்... சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% நிதி உதவி...! மத்திய அரசு தகவல்...

Wed Aug 7 , 2024
50% financial assistance to farmers under Suryashakti Power Scheme.

You May Like