fbpx

நெல்லை மக்களே.. சமூக நலத் துறையில் வேலை..!! 12-ம் வகுப்பு முடிந்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பிங்க!!

திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணியிடம் : உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,916

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 9

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Read more ; ஐ லவ் யூ டீச்சர்.. என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? – ஆன்லைன் வகுப்பில் மாணவன் செய்த செயல்..!!

English Summary

Assistant and Computer Operator (Assistant cum Data Entry Operator) post is going to be filled in Tirunelveli District Youth Justice Committee. Eligible and interested candidates apply immediately.

Next Post

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல இரயில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பண்ணுங்க... 

Wed Sep 18 , 2024
Railway Tickets Tips- If you want to go home on Diwali but are not getting a ticket, then follow these tips

You May Like