fbpx

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்..!! இதுவரை இல்லாத பேரிழப்பு..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

பூமிக்கு நெருக்கமாக வர இருக்கும் சிறுகோள் குறித்து நாசா ஆய்வு செய்துள்ளது. நாசாவின் OSIRIS-REX விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, 1999இல் முதன்முதலில் பூமியை நோக்கி வரும் அந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. பென்னு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், நமது கிரகத்தின் சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளை வைத்து ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், செப்டம்பர் 24, 2182-ல் அது பூமியைத் தாக்கக்கூடும் அல்லது நெருக்கமாக கடந்து செல்லும் என்று கணித்துள்ளனர்.

இந்த சிறுகோள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அது நமது கிரகத்தை தாக்கினால் 1,200 மெகா டன் ஆற்றலை வெளியிடலாம். அதாவது இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை விட 24 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். இது 22-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூமியைத் தாக்க அமைக்கப்படும் பாதையாக இருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பென்னு, பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக நாசா மதிப்பிட்டாலும், பூமியில் இருந்து சுமார் 4.65 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து அருகில் வரக்கூடிய ‘அபாயகரமான சிறுகோள்’ என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூமிக்கு வெகு அருகில் அதாவது சுமார் 32 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இது கடந்து செல்லவே அதிக வாய்ப்பு என்று நாசா கணித்துள்ளது.

Chella

Next Post

பெரும் அதிர்ச்சி..!! 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவலர்..!! புரட்டி எடுத்த மக்கள்..!!

Sat Nov 11 , 2023
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஒன்றிணைந்து குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துள்ளனர். தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங், அந்த சிறுமியை தனது அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணைக் […]

You May Like