ஜோதிடம் என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின்படி கணித்து கூறப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு நவகிரகம் துணையாக இருக்கும். இந்த நவகிரகங்கள் அவ்வப்போது இடம்மாறும். இவ்வாறு இடமாறும்போது 12 ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்படி 2024 ஆம் ஆண்டு நவக்கிரகங்களின் இடமாற்றத்தினால் ஒரு சில ராசியினர் காதல் வாழ்க்கையில் நுழைய போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்பதை குறித்து பார்க்கலாம்?
ரிஷபம்: காதல் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்து வரும் ரிஷப ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான வருடமாக அமையவுள்ளது. இந்த வருடம் நீங்கள் நினைத்த மாதிரியே உங்கள் காதல் வாழ்க்கை கைகூடும். முன்னதாகவே காதலித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும்.
கடகம்: கடக ராசியினருக்கு 2024 ஆம் வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த வருடம் காதல் வாழ்க்கை கைகூடி விரைவில் திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் வாய்ப்புகளும் கிடைக்கும்.
சிம்மம்: கிரகநிலை மாற்றம் 2024 ஆம் வருடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த வருடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மிகச்சிறப்பாக அமையும். மிகவும் திறமை வாய்ந்த சிம்ம ராசிக்காரர்கள் இந்த வருடம் எடுக்கும் எல்லா முடிவிலும் வெற்றியே கிடைக்கும்.
துலாம்: 2024 ஆம் வருடம் துலாம் ராசியினருக்கு இதுவரை கஷ்டத்தை ஏற்படுத்தி வந்த காதல் வாழ்க்கை, கைக்கூடி திருமணத்தில் முடியும். மேலும் நெருக்கமான மற்றும் அர்த்தமுள்ள உறவுகள் கிடைக்கும்.