fbpx

பெண்களுக்கு எந்த வயதில் ‘செக்ஸ்’ மீதான ஆசை அதிகரிக்கும்..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!

அன்பு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. ஆண் பெண் உறவில் காதல் தேவைப்படுவது போல் பாலுறவும் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், எந்த வயதில் பெண்கள் மிக ஆழமான அன்பை விரும்புகிறார்கள்.? நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள்..? என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால், பெண்கள் தங்களுடைய ஆசைகளை வெளிப்படையாக பேசினால் தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயத்தில் தன் ஆசைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். எனவே, இதுகுறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண் – பெண் இடையிலான உறவில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை அல்லது அதற்கு பிறகு, இந்த காலநிலையில் பெண்கள் எப்போது மிகவும் ஆழமான அன்பையும், நெருக்கத்தையும் விரும்புகிறார்கள்? இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவத்திற்கு அடியெடுத்து வைக்கும் போது, ​​பெண்கள் காதலைதான் அதிகம் விரும்புவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு காதல் ஆசை அதிகம் என்பது உண்மைதான் என்றாலும் ஆராய்ச்சி வேறு சொல்கிறது.

பல்வேறு வயதுடைய பெண்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இளமையில் அல்ல நடுத்தர வயதில் ஆழ்ந்த நெருக்கத்தை விரும்புகிறார்கள். 20 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்களில் 70 சதவீதம் பேர் அன்பையும் காமத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் அவர்கள் மனதில் பல பயங்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நினைத்தையும், சமூக கட்டுப்பாடுகளை நினைத்தும் தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்கின்றனர்.

23 முதல் 35 வயதுடைய பெண்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே காமத்தை விரும்புகின்றனர் அல்லது ஆழ்ந்த அன்பை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். 36 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 80 சதவீதம் பேர் ஆழ்ந்த அன்பை விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் செக்ஸ் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம் காணப்படுகிறது. 40 வயதை எட்டிய பிறகு, இந்த ஆசை இன்னும் தீவிரமாகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Read More : உங்கள் கால் விரல்களை வைத்தே முழு ஜாதகத்தையும் சொல்லலாம்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Only 30 percent of 23- to 35-year-old women want lust or feel the need to experience deep love.

Chella

Next Post

அட்டகாசம்...! மாணவர்களுக்கு கல்வி கடன் & வட்டி மானியம் வழங்கும் திட்டம்...! மத்திய அரசு ஒப்புதல்

Thu Nov 7 , 2024
Educational Loan & Interest Subsidy Scheme for Students.

You May Like