fbpx

அடேங்கப்பா..!! 610 கிலோ டூ 63 கிலோ..!! 500 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து அசத்தல்..!!

சவூதி அரேபியாவைச் சேர்ந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி என்பவர், சுமார் 10 ஆண்டுகளுக்குள் 500 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டில் உயிருக்கு ஆபத்தான நபராக இவர் அறியப்பட்டார். இவரது எடை, கடந்த 2013ஆம் ஆண்டில் 610 கிலோ இருந்தது. இதனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். இதுதொடர்பான தகவல் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவிற்கு தெரியவந்தது.

அவரது உயிரைக் காப்பாற்ற ஒரு விரிவான திட்டத்துடன் மருத்துவமனைக்கு வந்தார் சவுதி அரேபியா மன்னர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட காலித்துக்கு இலவசமாக உயர்மட்ட சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, 30 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இவர்கள் காலித் ஷாரிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி, உணவு கட்டுப்பாடு, தீவிரமான உடற்பயிற்சி முறைகள் மற்றும் தீவிர பிசியோதெரபி அமர்வுகள் ஆகியவை மேற்கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக, அவர் 6 மாதங்களில் கிட்டத்தட்ட பாதி உடல் எடையை இழந்தார். இதுவே கடந்த 2023ஆம் ஆண்டில் தனது உடல் எடையில் 542 கிலோ குறைத்து, தற்போது 63.5 கிலோ எடைக்கு வந்துவிட்டார். சுமார் 10 ஆண்டுகால தொடர் முயற்சியால் இவரது உடல் எடை படிப்படியாக குறைந்துள்ளது. இதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Read More : அடடே..!! இந்த 5 மாவட்டங்கள் தான் இன்னைக்கு டார்கெட்..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை..!!

English Summary

In the year 2023, he reduced his body weight by 542 kg and now he has reached 63.5 kg.

Chella

Next Post

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ஏன்?. உலக நாடுகளுக்கே முக்கியத்துவம் வாய்ந்தது!. 5 முக்கிய தகவல்கள்!

Wed Aug 21 , 2024
Why is Prime Minister Modi's visit to Ukraine? It is important for the countries of the world! 5 Important Information!

You May Like