fbpx

அடேங்கப்பா..!! தண்ணீர் வரி ரூ.1.9 கோடி..!! தாஜ்மஹாலுக்கு முதல் முறையாக பில் தீட்டிய மாநகராட்சி..!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், ரூ.1.5 லட்சத்தை சொத்து வரியாகவும் செலுத்துமாறு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன், இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டுள்ளது.

அடேங்கப்பா..!! தண்ணீர் வரி ரூ.1.9 கோடி..!! தாஜ்மஹாலுக்கு முதல் முறையாக பில் தீட்டிய மாநகராட்சி..!!

இந்த வரி 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கானவை. 15 நாட்களில் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் தாஜ்மஹால் கொண்டுவரப்படும் என ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், வரலாற்று சின்னங்களுக்கு சொத்து வரி பொருந்தாது. மேலும், புல் தரையை பசுமையாக வைத்திருக்கவே தண்ணீரை பயன்படுத்துவதாகவும், வணிக ரீதியாக பயன்படுத்தவில்லை என்பதால் அதற்கும் வரி விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும், தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

ஏய் ரூம்ல நீ மட்டும் தான இருக்க? அப்போ டிரஸ்ஸ கழட்டு சக தோழிக்கு அதிர்ச்சி வழங்கிய மாணவன் பின்பு நேர்ந்ததை பாருங்கள்!

Tue Dec 20 , 2022
தற்போது நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப்போகும் மூதாட்டி வரையில் அனைவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது.ஆனால் இந்த செல்போன் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, பல தீமையான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. அதனை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது நல்லதும், கெட்டதும். அதனை பலரும் இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த செல்போனால் சமூகத்திற்கு நல்ல விளைவுகள் ஏற்படுகிறதோ இல்லையோ தீய விளைவுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அதிலும் […]

You May Like